பெண்களுக்கான சிறு வணிக யோசனைகள்: உங்களுக்குள் இருக்கும் தொழிலதிபர் பிரகாசிக்கட்டும்

Table of Contents

Share this article

வருமானம் ஈட்டுவது என்று வரும்போது, இந்தியா முழுவதும் பல இடங்களில் பெண்கள் வீட்டில் இருக்கும் மனைவியாகவோ அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை செய்யவோ எதிர்பார்க்கப்படும் போது, ஆண்களே உணவளிப்பவர்களாக இருப்பது இன்னும் வழக்கமாகக் கருதப்படுகிறது. சமூக கருது ஒருபுறம் இருக்க ஒரு தனிநபராக, உங்கள் நல்வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கு நிதி ஸ்திரத்தன்மை இருப்பது முக்கியம்.

சிறு வணிகங்கள் பல்வேறு சமூக அடுக்குகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் சொந்த நேரத்தில் வருமானம் ஈட்ட அனுமதிக்கின்றன. சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்குவதும் பின்னர்  அதை விரிவுபடுத்துவதும் மிகவும் நிறைவாக இருக்கும். இந்தியாவின் பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் பெண் தொழில்முனைவோரின் வளர்ச்சியைக் காண முடிவது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது.

பெண் தொழில்முனைவோரின் முக்கியத்துவம் என்ன?

19 ஆம் நூற்றாண்டிலிருந்து பெண்கள் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த வீட்டிலிருந்து சிறு வணிகம் செய்வதிலிருந்து பெரிய அளவிலான நிறுவனங்கள் வரை நடத்தி வருகின்றனர். பெண் தொழில்முனைவோர் அதிக வேலைகளை உருவாக்குகிறார்கள், கணிசமான வருவாயைப் பெறுகிறார்கள் மற்றும் வணிக வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார்கள்.

ஆனால் தனிப்பட்ட தேவைகளை சமாளிப்பதற்கு அப்பால் பெண் தொழில்முனைவோர் தேசத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 770 பில்லியன் டாலர்களை பெற உள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும் மற்றும் புதிய தொழில்முனைவோர் அதற்குப் பின்னால் ஒரு முக்கிய உந்து காரணியாகும்.

இருப்பினும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் துறையில் பெண்கள் நுழைவது எளிதானது அல்ல. பெண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் நிறைய உள்ளன. இந்தியாவில் குறிப்பாக, போதுமான உள்கட்டமைப்பு, மக்கள்தொகை ஈவுத்தொகை, சமூக விதிமுறைகள் மற்றும் கல்வியின் பற்றாக்குறை ஆகியவை பெண் தொழில்முனைவோருக்கு மிகப்பெரும் சவாலாக அமைகிறது.

ஏற்கனவே நிறுவப்பட்ட தொழில்களில் கூட பெண்கள் ஒரு தர சார்புகள், பெண்களின் வணிக திறன்களில் குறைந்த நம்பிக்கை, நிதி சிக்கல்கள், நெட்வொர்க்கிங் சிக்கல்கள், பாதுகாப்பு மற்றும் குடும்ப ஆதரவின்மை போன்ற வடிவங்களில் பெண்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர். ஒரு வணிகத்தை நடத்தும் பெண்கள் மீதான பொதுவான விமர்சனம் என்னவென்றால், அவர்கள் தங்கள் வீட்டுக் கடமைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றைப் புறக்கணிக்கிறார்கள் என்பதேயாகும்.

இந்த சவால்கள் பெரும்பாலும் பல தலைமுறைகள் வழியாக கடைப்பிடிக்கப்பட விதிமுறைகள் மற்றும் சார்புகளை அடிப்படையாகக் கொண்டவை. கொள்கை வகுப்பிற்கு அப்பால், இந்த எண்ணத்தை மாற்றுவதற்கான சிறந்த வழி, அதிக பெண் தொழில்முனைவோரை பிரபலப்படுத்துவதே ஆகும். பாலின சமத்துவத்தை நோக்கி உலகம் தொடர்ந்து செல்லும் நேரத்தில் வணிகத்தில் பெண்களின் லட்சியங்கள் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட வேண்டும்.

இந்தியாவில் பெண்களுக்கு சுய தொழிலின் அவசியம் என்ன?

1. உங்கள் வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டை வழங்குகிறது

நீங்கள் வேலை செய்யும் பெண்ணாக இல்லாவிட்டால், பெரிய நிதி முடிவுகளை எடுக்கும்போது நீங்கள் ஓரங்கட்டப்பட்டதாக உணர வாய்ப்புகள் அதிகம். நீங்கள் உங்கள் சொந்த தொழிலை தொடங்கும்போது, நீங்கள் நிதியை நன்றாகப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை யாருடைய சம்மதமும் இல்லாமல் உங்கள் விருப்பப்படி செலவிடுவீர்கள்!

மேலும், ஒரு சுய தொழிலானது அவர்கள் கட்டளையிடும் சம்பளத்துடன் வேறொரு நிறுவனத்தில் வேலை செய்வதற்குப் பதிலாக, நீங்கள் வழங்கும் தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கு உங்களின் சொந்த விலைகளை அமைக்க உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இரண்டாம் வருமானம் அல்லது பல வருமான ஆதாரங்களைக் கொண்டிருப்பது உங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த அனுமதிக்கிறது. உங்கள் சொந்த தொழில் உங்கள் சொந்த நேர அட்டவணையில் இயங்குகிறது மற்றும் அது உங்களுடையது மட்டுமே. இது நீங்கள் விரும்பும் விஷயங்களுக்கு நேரத்தைச் செலவிட உதவுகிறது, சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையைப் பெற உங்களுக்கு வழிவகுக்கிறது.

2. கடனை விரைவாகக் குறைக்கிறது

மக்கள் பெரும்பாலும் சிறு வணிகங்களைத் தொடங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் கடனைக் குறைப்பதாகும். பல கடன் ஆதாரங்களில் உள்ள வட்டிகளைத் கட்டுவது கடினம். சில சமயங்களில் அது சாத்தியமற்றதாக கூட தோன்றலாம்.

சிறு வணிகங்கள் மூலம், உங்கள் முதலீட்டில் அற்புதமான வருமானத்தைப் பெறலாம். இதை உங்கள் வணிகத்தில் மீண்டும் முதலீடு செய்யலாம் அல்லது உங்கள் கடனை அடைக்க லாபத்தைப் பயன்படுத்தலாம். இதைச் சாதிக்க பல வருடங்கள் எடுக்கும் என்றாலும் உங்கள் வணிகம் வளரும்போது, குறைந்த நேரத்தில் கடனில் இருந்து விடுபடுவதை இலக்காகக் கொள்ளலாம்.

3. நிதி நிலைத்தன்மையை வழங்குகிறது

கொரோனா தொற்றுநோய் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்தது மற்றும் பல வணிகங்களை இழுத்து மூட வைத்தது. இது பல வேலை இழப்புகளுக்கு வழிவகுத்தது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.5 மில்லியன் மக்கள் வேலை இழந்துள்ளனர். பொருளாதாரம் மெதுவாகவே மீண்டு வருவதால் வேலைப் பாதுகாப்பு அவ்வளவு நம்பகமானதாக இல்லை.

இந்தியாவில் ஒருவரின் சராசரி சம்பளம் மாதத்திற்கு 31,900 ரூபாயாக இருக்கும்போது, சராசரி வாழ்க்கைச் செலவு வாடகை இல்லாமல் 23,832 ரூபாய் வரை வருகிறது. இந்த புள்ளிவிவரங்கள் நீங்கள் பணிபுரியும் தொழில் அல்லது நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடும், ஆனால் சராசரிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் மட்டுமே நீங்கள் ஒரு மாதத்திற்குச் சம்பாதிக்கும் அளவுக்கு சம்பாதிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

இது நம்பமுடியாத அளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தும், மாதந்தோறும் சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருப்பது மிகவும் கொடுமையான ஒரு விஷயம். ஒரு எதிர்பாராத செலவு அல்லது அவசரநிலை வந்தால் அது பெரும் சுமையாக முடியும்.

உங்கள் எதிர்காலத் தேவைகளான அவசரநிலைகள், ஓய்வூதியம் அல்லது சொத்துக்களுக்காக நீங்கள் முதலீடு செய்யக்கூடிய அல்லது சேமிக்கக்கூடிய கூடுதல் வருமானத்தை ஒரு சிறு  வணிகம் உங்களுக்குத் தரும். வேலைச் சந்தை மிகவும் நிலையற்றதாக இருப்பதால் வேலை பாதுகாப்பு என்பது முன்பு இருந்ததைப் போல இல்லை. நீங்கள் உங்கள் சொந்த வணிகத்தை நம்பியிருக்கும் பட்சத்தில் உங்கள் முதன்மை வருமானம் துண்டிக்கப்பட்டால், உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

4. உங்கள் ஆர்வத்தைப் பின்பற்ற வாய்ப்பளிக்கிறது 

உங்கள் பொழுதுபோக்குகள் அல்லது ஆர்வங்களை வருவாய் நீரோட்டமாக மாற்ற சிறு வணிகங்கள் ஒரு சிறந்த வாய்ப்பாகும். சமையல், தையல், மெஹந்தி கலை, திருமண திட்டமிடல் மற்றும் உள்துறை வடிவமைப்பு ஆகியவை வணிக முயற்சிகளாக மாறிய இந்திய பெண்களின் பொதுவான ஆர்வங்களில் சில.

இந்தத் திறமைகளை முதலீடு செய்து சரியான முறையில் சந்தைப்படுத்தினால், பெண்கள் இந்தச் செயல்பாடுகள் மீதான தங்கள் ஆர்வத்தை கூடுதல் வருமான ஆதாரமாக மாற்ற முடியும். உங்கள் திறமை மற்றும் நிபுணத்துவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், அவர்கள் உங்கள் திறமையைப் பாராட்டலாம் அப்படியே அதுவே ஒரு வியாபாரமாக மாறக்கூடும்.

ஏதோ ஒரு வேலையில் இருப்பதை விட, நீங்கள் விரும்பும் மற்றும் ரசிக்கும் ஒன்றில் வேலை செய்வது மிகவும் திருப்தி அளிக்கிறது.

திறன்கள் மற்றும் முதலீட்டின் அடிப்படையில் பெண்களுக்கான 6 சிறு வணிக யோசனைகள்

சிறு வணிகங்களுக்கான வாய்ப்புகள் முடிவற்றவை. நூற்றுக்கணக்கானவற்றைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம் என்றாலும், முதல் நாளிலிருந்தே உங்களைத் தூண்டக்கூடிய 6 யோசனைகளை நாங்கள் இங்கு பட்டியலிடுகிறோம்!

இந்த வணிக யோசனைகளில் சிலவற்றை இரண்டு வகைகளாகப் பிரிப்போம். உங்கள் திறமைகள் எங்குள்ளது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தால் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்வது மிகக் குறைவாக இருந்தால், பெண்களுக்கான அவர்களின் திறமையின் அடிப்படையில் சிறு  வணிக யோசனைகளை எளிதாகப் முடிவு செய்யலாம்.

உங்களிடம் அதிக முதலீடு செய்வதற்கான வழிகள் இருந்தால் பல வணிக யோசனைகள் பொருத்தமான வருமானத்தை அளிக்கலாம்.

திறன்களின் அடிப்படையில் சிறு வணிக யோசனைகள்

பெண்களுக்கான பின்வரும் சிறு வணிக யோசனைகளுக்கு முதலீட்டை விட அதிக திறன் தேவைப்படுகிறது. எனவே, நீங்கள் குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் தொடங்கி மேலும் ஆராய்ந்து அதில் இறங்க எண்ணினால் இவை சில சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமையும்!

ஆசிரியர் வேலை

இந்தியாவில், கல்வி முறையில் போட்டித்தன்மை அதிகரித்து வருவதால் வீட்டு ஆசிரியர்களின் தேவை அதிகரித்து வருகிறது. கல்வி என்று வரும்போது, உங்கள் அறிவைப் பொறுத்து மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழக நிலை வரை குழந்தைகளுக்கு கற்பிக்கலாம். கைவினைப்பொருட்கள் மற்றும் சமையல் போன்ற பாரம்பரிய கல்வி இல்லாத பாடங்களைக் கூட நீங்கள் கற்பிக்கலாம்.

இந்த முயற்சியை வெற்றிகரமாக செய்ய தேவையான முக்கிய திறன்கள் தகவல் தொடர்பு மற்றும் பாடத்தில் உங்கள் நிபுணத்துவம் ஆகும். திருப்தியடைந்த மாணவர்கள் தங்கள் சகாக்களுக்கும் குடும்பத்தினருக்கும் உங்களைப் பரிந்துரைப்பதால், உங்கள் வணிகத்தை வளர்ப்பது எளிதாக இருக்கும்.

இதை தொடங்குவதற்கு, நீங்கள் உங்கள் அருகில் உள்ள கடைகளில் ஃபிளையர்களை ஒட்டலாம் அல்லது உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு நீங்கள் பயிற்சிச் சேவைகளை வழங்குகிறீர்கள் என்பதை வாய்மொழியாகப் தெரிவிக்கலாம். கூடுதலாக, ஆன்லைனில் கற்பிக்க ஃப்ரீலான்ஸ் இணையதளங்களிலும் பதிவு செய்யலாம். இது உங்கள் எல்லையை விரிவுபடுத்தவும், உங்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை எளிதாக்கவும் உதவும்.

உள்ளடக்க எழுத்தாளர் (Content writer)

நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் இருப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்குவதால், ஃப்ரீலான்ஸ் உள்ளடக்க எழுத்தாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது. உங்கள் எண்ணங்களை எழுதுவதிலும் கதை சொல்லுவதிலும் உங்களுக்கு நல்ல திறமை இருந்தால், இது உங்களுக்கு ஏற்ற சிறு தொழிலாக இருக்கலாம்.

வாடிக்கையாளர்களை ஈர்க்க நீங்கள் ஆராய்ச்சி மற்றும் எஸ்சிஓ தேர்வுமுறையில் திறமையானவராக இருக்க வேண்டும். உள்ளடக்கத்தை எழுதுவதற்கு சொந்தமாக எழுதக்கூடிய எழுத்து வளம் மிக முக்கியம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப புத்தம் புதிய உள்ளடக்கத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் மற்றும் அவர்கள் கொடுக்கும் காலக்கெடுவை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

எம்பிராய்டரி வேலை

எம்பிராய்டரி அல்லது தையல் கற்றுக்கொண்ட பெண்கள் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான டிசைன்களை உருவாக்க தங்கள் திறமைகளைப் பயன்படுத்தலாம். இந்த சிறு வணிகமானது கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்களுக்கு ஏற்றது, ஏனெனில் இதற்கு முறையான கல்வி தேவையில்லை, மேலும் இந்த திறன்கள் பெரும்பாலும் அவர்களின் குடும்பங்களில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

கைவேலை தனித்துவமானது மற்றும் நிறைய நேரத்தையும் முயற்சியையும் எடுக்கும். எனவே, இது பெண்கள் வருமானத்திற்காக பயன்படுத்தக்கூடிய மிகச் சிறந்த திறமையாகும். அவர்கள் தங்கள் தையல் சேவையை கடைகளில் அல்லது ஆன்லைனில் விற்கலாம். தனித்துவமான டிசைன்களை வழங்குவது வாடிக்கையாளருக்குத் தேவையானதைச் சரியாகப் பூர்த்திசெய்ய உங்களுக்கு உதவும்.

முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட சிறு வணிக யோசனைகள்

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள பெண்களுக்கான சிறு வணிக யோசனைகளில் வேகமாக வளரக்கூடிய தொழிலை ஆரம்பிக்க விரும்பினால் அதற்கு கணிசமான முதலீடு தேவை. எனவே, முதலீடு செய்வதற்கான வழி உங்களிடம் இருந்தால் மற்றும் உங்கள் யோசனையில் ஆர்வமாக இருந்தால், உறுதியுடன் அவற்றை முயற்சிக்கவும்!

பேக்கரி

இந்த வணிகத்தைத் தொடங்க உங்களுக்கு உணவு மற்றும் தொழில் முனைவோர் திறன்கள் பற்றிய அறிவு இருக்க வேண்டும். ஸ்டார்ட்-அப் பேக்கரிகளுக்கு சிறந்த இடம் சமூக ஊடகங்கள். உங்கள் பிராண்டை உருவாக்கவும், ஆன்லைன் பக்கத்தை உருவாக்கவும் மற்றும் உங்கள் பொருட்களின் சரியான விலையை தேர்வு செய்யவும் வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவுடன், பல  வாடிக்கையாளர்களை எளிதில் பெறலாம்.

நிகழ்வு திட்டமிடுபவர்

இந்தியாவில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் பிரபலமானவை. திருமணமாகட்டும், வளைகாப்பு விழாவாகட்டும், பிறந்தநாள் விழாவாகட்டும், அல்லது வெறும் ப்ரோமோஷனாகட்டும், அதை சிறப்பாக கொண்டாட விரும்புகிறோம். ஆனால் அனைத்து நிகழ்வுகளின் வெற்றிக்குப் பின்னால் ஒரு நிகழ்வு திட்டமிடுபவர் இருக்கிறார்.

உங்களுக்கு விவரங்கள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் விருப்பம் இருந்தால், இது உங்களுக்கான சிறந்த தொழிலாகும். உங்கள் நிகழ்வுகளுக்கான சிறந்த டீல்களைப் பெறவும், பட்ஜெட்டுக்குள் இருக்கவும் நீங்கள் நெட்வொர்க் செய்து பல புதிய தொடர்புகளை உருவாக்க வேண்டும்.

புகைப்படம் எடுத்தல்

புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தால் அது ஒரு திடமான சிறு வணிகத்தை தொடங்க வழிவகுக்கும். தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் நீங்கள் குறைந்தபட்ச உபகரணங்களுடன் சிறந்த புகைப்படங்களைக் கிளிக் செய்யலாம். நீங்கள் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் முதலீட்டின் வருமானம் மிகவும் லாபகரமாக இருக்கும்.

இதைத் தொடங்குவதற்கு, உங்கள் வேலையைக் காண்பிக்க ஒரு சமூக ஊடகப் பக்கத்தை உருவாக்கவும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள்அதன் மூலம் உங்களை தொடர்பு கொண்டு அதை முன்னெடுத்துச் செல்லலாம். புகைப்படம் எடுத்தல் உங்களுக்கு ஏற்ற நேரத்தில் செய்யக்கூடிய ஒரு தொழிலாகும்.

இதர வருமானத்திற்கென என ஆரம்பித்த வெற்றிகரமான தொழில்கள்

1. வெட் மீ குட் (Wed Me Good)

2014 இல் நிறுவப்பட்டது, வெட் மீ குட் (Wed Me Good) என்பது மணமக்கள் மற்றும் மணமகள் திருமணத்தைத் திட்டமிடுவதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் கண்டறிய உதவும் ஒரு போர்டல் ஆகும். அவர்களது வலைப்பதிவு peachesandblush.com இல் முந்தைய வெற்றியைப் பெற்ற இணை நிறுவனர் மெஹக் சாகர், இந்தியாவில் திருமணத் திட்டமிடலுக்கான தனித்துவமான  போர்டல் இல்லாததைக் கவனித்தார். இந்த நிறுவனம் இப்போது திருமணம் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் செல்லக்கூடிய தளமாக உள்ளது.

2. தி மம்மம்.கோ (Mumum.Co)

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் வேடிக்கையான உணவுகளை தயாரிப்பதில் இந்த பிராண்ட் கவனம் செலுத்துகிறது. அவர்களின் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்களின் மேல் விருப்பம் இல்லாததால், இணை நிறுவனர்களான ஸ்ரேயா லம்பா மற்றும் ஃபரா நதானி மென்சிஸ் ஆகியோர் இந்த வணிகத்தைத் தொடங்கத் எண்ணினர். இந்நிறுவனத்தின் தோராயமான நிகர மதிப்பு 3.4 கோடி ரூபாய்.

3. சிறிய கருப்பு புத்தகம் (லிட்டில் பிளாக் புக்)

டெல்லியில் பல பரிந்துரைகளுக்காக Tumblr வலைப்பதிவாகத் தொடங்கப்பட்ட லிட்டில் பிளாக் புக் அப்ளிகேஷன் இப்போது தினமும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த ஆப் பல உள்ளூர் வணிகங்களைக் கண்டறிய பயனர்களுக்கு உதவுகிறது. இந்த வணிகமானது முதலீட்டாளர்களிடமிருந்து $7 மில்லியனுக்கும் அதிகமான நிதியைப் பெற்றுள்ளது.

பிரபல பெண் தொழில்முனைவோர்

  • கிரண் மஜும்தார் ஷா – பயோகான் லிமிடெட் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா 2019 ஆம் ஆண்டில் உலகின் 65 வது சக்திவாய்ந்த பெண்மணி என்ற பட்டத்தைப் பெற்றார்.
  • ரிது குமார் – 2013 இல் பத்மஸ்ரீ விருதை வென்ற முதல் பிரதான ஆடை வடிவமைப்பாளர் ரிது ஆவார்.
  • ஃபால்குனி நாயர் – இவர் நைகாவின் நிறுவனர், பிசினஸ் டுடே தனது “மிக சக்திவாய்ந்த வணிகம்” என்று அங்கீகரித்தது.
  • வந்தனா லுத்ரா – இவர் VLCC இன் நிறுவனர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு இலவசக் கல்வி வழங்க உதவும் NGO “Khushii” ஐ நடத்தி வருகிறார்.
  • சுசி முகர்ஜி – லிம்ரோட்டின் நிறுவனராக இவர் என்டிடிவியின் யூனிகார்ன் ஸ்டார்ட்-அப் விருதை வென்றார்.
  • வாணி கோலா – கலாரி கேபிட்டலை நிறுவிய முதலீட்டாளர், தொழில்முனைவோருக்கான மதிப்புமிக்க பெண் விருதை வென்றவர்.
  • ராதிகா காய் – இந்தியாவின் மிகப்பெரிய முழு மேலாண்மை சந்தையான Shopclues.com இன் இணை நிறுவனர்.

முடிவுரை

நிதி சுதந்திரம் என்பது ஒவ்வொரு நபருக்கும் இருக்க வேண்டிய ஒரு பாக்கியம். இதன் நன்மைகள் எல்லையற்றவை. மேலும் இன்றைய காலகட்டத்தில் இதை அடைய சில வழிகள் மட்டுமே உள்ளன.

இந்தியாவில் ஒரு சிறு வணிகம் நம்ப முடியாத அளவிற்கு லாபகரமானதாக இருக்கும், ஏனெனில் இந்திய நுகர்வோர் தளம் உலகின் மிகப்பெரிய ஒன்றாகும். பெண் தொழில்முனைவோரின் பயணத்தை ஆதரிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இந்தக் கட்டுரையானது, நிதிச் சுதந்திரத்திற்காக மட்டும் அல்லாமல், நீங்கள் உண்மையிலேயே விரும்புவதைச் செய்வதன் மூலம் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்வதில் உள்ள மகிழ்ச்சிக்காக உங்கள் சொந்த தொழிலை தொடங்க உங்களைத் தூண்டியதாக நம்புகிறோம்!

This post is also available in: English Hindi Tamil

Share:

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Subscribe to Newsletter

Start a business and design the life you want – all in one place

Copyright © 2022 Zocket